எதற்கும் துணிந்தவன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு – தட்டி தூக்குவாரா சூர்யா??

0

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி தியேட்டரில் ரீலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு:

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது. ஒரு சில அரசியல்வாதிகள், இந்த படத்திற்கு எதிராக குரல் கொடுத்தாலும், ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் சூர்யாவுக்கு ஆதரவாக துணை நிற்பதாக தெரிவித்தனர்.

இந்த படத்தை அடுத்து நடிகர் சூர்யா “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படம் அடுத்த ஆண்டு(2022), பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here