மீண்டும் தல அஜித்துடன் இணையும் இயக்குனர் சிவா – வேற லெவல்லில் விளையாடும் “வி” செண்டிமெண்ட்!!

0

நடிகர் அஜித் வலிமை படத்தை அடுத்து, இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் கூட்டணி:

நடிகர் அஜித், தற்போது இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள, நிலையில் வருகிற பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து, போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் வினோத் இயக்கத்தில்  அஜித் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி வந்தது.

மேலும் அஜித்துடன் சுதா கொங்கரா மற்றும் தியாகராஜன் குமாரராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது இயக்குனர் சிவா, அஜித்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வீரம், வேதாளம், விசுவாசம், விவேகம் போன்ற படங்களை எடுத்த சிவாவுடன், நடிகர் அஜித் மீண்டும் “வீ” சென்டிமென்டில் இணைவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here