தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும்தோட்டா’ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ள ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் நேற்று முன் தினம் தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஸ்ரீவத்சவ் சந்திரசேகர்

திரையுலகில் கடந்த ஆண்டு மறக்க முடியாத பல சோகமான மரண சம்பவங்கள் நடந்தது. பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் தற்கொலை மற்றும் பிரபலங்களின் மரண சம்பவங்கள் திரையுலகை அதிக அளவில் பாதித்த விஷயமாகும். பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட், நடிகை சித்ரா ஆகியோரின் தற்கொலைகளும் இதில் அடக்கம். கடந்த ஆண்டு மட்டுமல்லாது இந்த ஆண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும்தோட்டா’ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ள நடிகர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் நேற்று முன் தினம் தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு?? மக்கள் மன்ற நிர்வாகி விளக்கம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தற்போது ”வல்லமை தாராயோ” என்ற வெப் தொடரில் நடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு படப்பிடிப்புகள் இல்லை. என்றாலும் தான் படப்பிடிப்புக்கு போவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை பெரம்பூரில், அவரது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டிற்கு சென்ற அவர், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது மரணம் தொடர்பான விசாரணையில் அவர் மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார் எனவும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here