சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்திற்கு அடித்த லாட்டரி.., ரிலீஸ் ஆகுறதுக்குள்ள இத்தனை கோடி வசூலா??

0
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்திற்கு அடித்த லாட்டரி.., ரிலீஸ் ஆகுறதுக்குள்ள இத்தனை கோடி வசூலா??
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்திற்கு அடித்த லாட்டரி.., ரிலீஸ் ஆகுறதுக்குள்ள இத்தனை கோடி வசூலா??

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள, பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் அதிக தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரின்ஸ் படம்:

கோலிவுட்டில் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள பிரின்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். அண்மையில் வெளியான பிம்பிளிக்கி பிளாப்பி பாடல் இணையத்தை தெறிக்க விட்டது. மேலும் படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் விற்பனை தொகை வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ஆகிய இரண்டு உரிமைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட ரூபாய் 42 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ‘பிரின்ஸ்’ படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக தற்போது விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்பே கோடிக்கணக்கில் வசூலை அள்ளியதால் ‘பிரின்ஸ்’ திரைப்பட குழுவினர் சந்தோஷத்தில் ஆழ்ந்து உள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here