வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் ஆன்லைனில் இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!!

0
வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் ஆன்லைனில் இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!!
வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் ஆன்லைனில் இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!!

தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி அனைத்து மாநிலங்களிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் வீட்டிலிருந்தபடியே இந்த இணைப்பை எப்படி மேற்கொள்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

இந்திய தேர்தல் ஆணையம் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் முறையை கொண்டு வந்துள்ளது. அதாவது தேர்தலில் நடக்கும் ஏராளமான முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மோசடிகளை தவிர்க்கலாம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போலி வாக்காளர் அட்டையை வைத்து ஓட்டு பதிவு பண்ணுவதையும் தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது விருப்பமானது என்றும், அதை இணைக்காதவர்கள் போதுமான காரணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் மொபைல் (ஆன்லைன்) மூலமாகவே இணைக்கும் வசதியும் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்த வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பது அவசியம்.

  • Google Play Store or Apple App store ல் இருந்து Voter Helpline app யை download செய்ய வேண்டும்.
  • அடுத்து, செயலியை open செய்ததும் ‘I Agree’ option-னை கிளிக் செய்து next கொடுக்க வேண்டும்.
  • அதில் ‘Voter Registration’ என உள்ள முதல் ஆப்ஷனை select செய்ய வேண்டும்.அதில் அங்கீகார படிவம் 6B யை open செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து ‘‘Lets Start’ option-னை click கொடுக்க வேண்டும். அதில் உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP அனுப்புவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை அதில் உள்ளிட்டு, Verify செய்ய வேண்டும். அதில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்ற ஆப்ஷனை select செய்து, அதன் எண்ணை (EPIC) உள்ளிட வேண்டும்.
  • அடுத்து வாக்காளர்கள் தங்களது மாநிலத்தை select செய்து, வாக்காளர் விவரத்தை எடுக்க வேண்டும்.
  • அந்த விவரங்கள் வந்ததும் ‘Proceed’ ஆப்ஷனை select செய்ய வேண்டும்.பின்னர் ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அதை முடித்ததும் ‘Done’ கொடுத்தால் படிவம் 6B ஓபனாகிறது. இப்போது ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு ‘Confirm’ கொடுத்தால் அந்த படிவம் சமர்ப்பிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here