சூப்பர் ஸ்டாருக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போட்ட இயக்குனர்., மீண்டும் ரிஸ்க் எடுக்க துணிந்த SK!!

0
சூப்பர் ஸ்டாருக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போட்ட இயக்குனர்., மீண்டும் ரிஸ்க் எடுக்க துணிந்த SK!!
சூப்பர் ஸ்டாருக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போட்ட இயக்குனர்., மீண்டும் ரிஸ்க் எடுக்க துணிந்த SK!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாவீரன் படத்தை முடித்த பிறகு, பிரபல விஜய் பட டாப் இயக்குனருடன் இணைய உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட் :

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டான், டாக்டர் போன்ற படங்களின் வெற்றிக்குப் பின், பிரின்ஸ் என்ற படத்தில் நேரடியாக தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தப் படத்தை முடித்த கையோடு, அவர் இயக்குனர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் விஜய்யை வைத்து கத்தி, துப்பாக்கி மற்றும் சர்க்கார் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து இவர் இயக்கிய தர்பார் படம், அந்த அளவு பேசப்படவில்லை.

கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமண நியூ அப்டேட்…, விருந்தினர்கள் மொபைல் கொண்டு வர அனுமதி இல்லையா??

இந்த நிலையில் இவர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை பான் இந்திய மொழிகளில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது சிவகார்த்திகேயன் மீண்டும், ரிஸ்க் எடுக்க தயாராகி விட்டாரோ? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here