விஜய் டிவியை விட்டு பிரபல சேனலுக்கு தாவிய ஹீரோ.., ஓ இது தான் விஷயமா?? சீக்ரெட்டாக வெளிவந்த தகவல்!!!

0
விஜய் டிவியை விட்டு பிரபல சேனலுக்கு தாவிய ஹீரோ.., ஓ இது தான் விஷயமா?? சீக்ரெட்டாக வெளிவந்த தகவல்!!!
விஜய் டிவியை விட்டு பிரபல சேனலுக்கு தாவிய ஹீரோ.., ஓ இது தான் விஷயமா?? சீக்ரெட்டாக வெளிவந்த தகவல்!!!

சன், விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பிரைம் டைம் சீரியல்கள் தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் கடந்த 2022 முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. மேலும் இதில் ஹீரோ, ஹீரோயினுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் சீரியல் நிறுத்தப்பட்டது பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சிபு சூரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீசன் 2 வில் நடித்தார். ஆனால் இந்த சீரியலும் விரைவில் முடிந்த நிலையில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இப்போது புதியதொரு சீரியலில் இவர் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க உள்ளாராம். மேலும் இவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில் ஜீ தமிழ் சேனல் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here