பெண் பார்க்க சென்ற இடத்தில் அவமானப்பட்டு திரும்பிய டி. ராஜேந்தர் – கவலைக்கிடமான நிலையில் சிம்பு!

0

தொட்டு நடித்து பிரபலமாகும் சில நடிகர்களுக்கு மத்தியில் தொடாமல் நடித்து பிரபலமான நடிகர் ஒருவரும் இருக்கத்தான் செய்கிறார். இப்போவே தெரிஞ்சிருக்கும் அது யாருன்னு.. அட ஆமாங்க! நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த டி. ராஜேந்தர் தான் அது. இவருக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற மகன்களும் இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.

இரண்டு பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்த டி. ராஜேந்தர் மூத்த மகன் சிம்பு விஷயத்தில் தவறி விட்டார் போல. வயசு 40 ஐ தொட்டும் இன்னும் அவருக்கென வாழ்க்கை அமையவில்லை. நடிகர் சிம்பு ஒரு காலத்தில் உண்மையிலேயே மன்மதனாக தான் இருந்தார். இதனால் பல கிசுகிசுக்களிலும் சிக்கி, காதலிலும் படு தோல்வியை சந்தித்தார்.

இடையில் சில ஆண்டுகள் மார்க்கெட் சரிந்து சிம்பு படம் ஏதும் வெளிவராமல் இருந்தது. இப்படி இருக்கையில் திடீரென மாநாடு படத்தின் மூலம் மீண்டும் கம் பாக் கொடுத்து பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் டி. ராஜேந்தர் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்கா வரை சென்றும் இருந்தார். அதனால் சிம்புவின் கல்யாணத்தை பார்க்க நினைத்தவர் தொடர்ந்து மகனுக்கு பெண் பார்க்கும் கடமையில் இறங்கியுள்ளார்.

அப்படி சொந்தகார பெண்ணான சிறந்த தொழிலதிபர் மகள் ஒருவரை சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி பொண்ணு பார்க்க சென்றுள்ளார். அங்கு இவருக்கு இருக்கும் சொத்து மதிப்பு பற்றியும், மகனுக்கு இருக்கும் பிரபலம், அந்தஸ்த்து பற்றியும் சொல்லி பெண் கேட்டுள்ளார். அதற்கு பெண் வீட்டார் காசு, பணத்தை வைத்து என்ன செய்ய? உங்க மகனுக்கு வயசும் கூடிருச்சு. அதுமட்டுமில்லாம நிறைய பெண் நடிகைகள் விவகாரத்தில் சிக்கியதை குறித்தும் பேசி பெண் கொடுக்க மறுத்துள்ளார்கள். இது டி. ராஜேந்தர் அவர்களுக்கு மிக பெரிய அவமானமாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here