என்னடா இது.., இவளோ கோடி நஷ்டத்துல போயிடுச்சா.., தி லெஜெண்ட் பாடதிற்கு வந்த நிலைமை!!

0

லெஜெண்ட் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் சரவணா ஸ்டார் உரிமையாளார் சரவணன். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிக்கும் ஆசை அதிகமாகி இருந்துள்ளது. அதற்கு சரியான சமயம் இப்பொழுது தான் அமைந்துள்ளது. மேலும் ஹன்சிகா, தமன்னாவை வைத்து அவரது கடைக்கு விளம்பரம் எடுக்கிறேன் என்ற பெயரில் டூயட் ஆடி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது தி லெஜெண்ட் திரைப்படமும் வெளியாகி பலதரப்பட்ட கமெண்ட்ஸ்களை பெற்றிருந்தது. மேலும் லெஜெண்ட் சரவணனை கலாய்ப்பதற்காகவே இந்த படத்தை பார்க்க போனவர்கள் தான் அதிகம். இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருந்தனர்.

 

இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகி பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இப்படி இருக்க இந்த திரைப்படத்தில் ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால் அது சரவண அருள் ஹீரோயினை தொடாமலே நடித்திருந்ததாக அவரை ஒரு கூட்டம் பாராட்டி இருந்தது.

மேலும் இந்த படத்தை தயாரிக்க 100 கோடி செலவானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் மொத்த வசூல் ரூ.45 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் ஓடிடி உரிமையை ரூ.25 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here