இந்த ஆண்டின் இறுதியில் சிம்புவின் மாநாடு – வெளியாவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய சுவாரசியம்!!

0

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் இன்னும் 10 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டின் கடைசி வெளியீடாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

காத்திருக்கும் ரசிகர்கள்:

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் உருவான படம் மாநாடு.  டைம் லூப்  என்பதை கருப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.  தீபாவளியன்று ரிலீசாக வேண்டிய இந்த படம், சில பல காரணங்களால் நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் படமாக மாநாடு இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில், வருகிற நவம்பர் 19ஆம் தேதி ஜாங்கோ, சபாபதி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.  ரசிகர்கள் பெரிதும் பார்ப்பதற்கு காத்திருந்த அண்ணாத்த, எனிமி, அரண்மனை போன்ற படங்கள் சோடை போன நிலையில் இந்த ஆண்டின் கடைசி படமான மாநாடு ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here