அடுத்த பிளாக் பஸ்டர் படத்துக்கு ரெடியான சிம்பு.., பிரபல இயக்குனருடன் கூட்டணி!!

0
அடுத்த பிளாக் பஸ்டர் படத்துக்கு ரெடியான சிம்பு.., பிரபல இயக்குனருடன் கூட்டணி!!
அடுத்த பிளாக் பஸ்டர் படத்துக்கு ரெடியான சிம்பு.., பிரபல இயக்குனருடன் கூட்டணி!!

சிம்பு பத்து தல படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில் தற்போது அவரின் அடுத்த திரைப்படம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு – ஏ. ஆர். முருகதாஸ்:

சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சிம்பு. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் பத்து தல. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் 2ம் தேதி வெளியாக இருந்த நிலையில், இன்னும் படத்தை முடிக்காத காரணத்தால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பத்து தல படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவுக்கு இப்படியும் ஒரு மனசு இருக்கா? உண்மையை உடைத்த மாமியார்.., என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

அதாவது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் கடைசியாக இயக்கி வெளிவந்த தர்பார் திரைப்படம் தோல்வி அடைந்ததால். இப்படத்தை கண்ணும் கருத்துமாக எடுப்பார் என ரசிகர்களால் நம்பப்படுகிறது. தற்போது இந்த தகவல் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here