உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்…, வெளியான தகவல்!!

0
உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்..., வெளியான தகவல்!!
உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்..., வெளியான தகவல்!!

FIH உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு இன்னும் 50 நாட்களே உள்ளதால், இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FIH உலக கோப்பை:

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால், ஆண்களுக்கான FIH உலக கோப்பை தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒடிசாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், 16 அணிகள் A , B, C மற்றும் D ஆகிய 4 குரூப்களின் கீழ், தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், இந்திய அணியானது, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் குரூப் D யில் இடம் பெற்றுள்ளது. முதலில் இந்திய அணி ஸ்பெயின் அணிக்கு எதிராக ஜனவரி 13ம் தேதியும், 15ம் தேதி இங்கிலாந்துடனும், 19ம் தேதி வேல்ஸ் அணியிடனும் மோத உள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் முன்னிலை பெரும் அணிகள், அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும். இதற்கான, காலிறுதி போட்டிகள் 24, 25 தேதிகளிலும், அரையிறுதி போட்டிகள் 27ம் தேதியும், இறுதிப் போட்டிகள் 29ம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றம்…, டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெறுவாரா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்த போட்டிகள் அனைத்தும் ஒடிசாவின் கலிங்கா ஹாக்கி ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவில் புதிதாக கட்டப்பட்ட பிர்சா முண்டா ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இன்று முதல் உலக கோப்பைக்கு 50 நாட்கள் உள்ளதால், ஹாக்கி சங்கத் தலைவர் திலீப் டிர்கி, இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் ஆரம்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here