நடிகர் சிபிராஜின் மாயோன் பட டீசர் – பார்வையற்றவர்களும் உணர படக்குழு எடுத்த புது முயற்சி!!

0

நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மாயோன் படத்தின் டீசரை மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்படும் பிரதியேக ஒலி குறிப்புடன் வெளியிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புதிய முயற்சி:

நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ், அறிமுக இயக்குனர் என்.கிஷோர் இயக்கத்தில் மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு நாயகியாக, தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், நடிகர் ராதாரவி,கே எஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் பிரத்தியேகமான புதிய முயற்சி ஒன்றை, இந்த  படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் டீசரை, பார்வையற்றவர்களும் உணரும் வகையில் பிரத்தியேக ஒலி  குறிப்புடன் அதை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே மாற்றுத்திறனாளி கலைஞரான இன்ஸ்பயரிங் இளங்கோ இந்த முறையில் சைக்கோ படத்தின் டீசரை தயாரித்து வெளியிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here