2 நாளில் 200 கோடியை பீட் செய்து சாதனை படைத்த “பதான்” திரைப்படம்.., 4 வருடங்களுக்கு பிறகு சாதித்த ஷாருக்கான்!!

0
2 நாளில் 200 கோடியை பீட் செய்து சாதனை படைத்த
2 நாளில் 200 கோடியை பீட் செய்து சாதனை படைத்த "பதான்" திரைப்படம்.., 4 வருடங்களுக்கு பிறகு சாதித்த ஷாருக்கான்!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பதான் திரைப்படம்:

இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். தற்போது அவர் நடிப்பில் பான் இந்திய படமாக “பதான்” திரைப்படம் உருவாகியுள்ளது. அதுபோக ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலரை விஜய் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபிகா காவி நிறத்தில் உடை அணிந்து கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் பல இந்து அமைப்புகள் பதான் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த மாதிரி படத்துல நடிச்சதால வீடு கூட வாடகைக்கு தர மறுத்தாங்க.., பிரபல நடிகை கதறல்!!

அதாவது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலக அளவில் 235 கோடிகளை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here