T20 யில் ரன் வேட்டையை தொடரும் சூர்யகுமார்…, நியூசிலாந்துக்கு எதிராக ஜொலிப்பாரா??

0
T20 யில் ரன் வேட்டையை தொடரும் சூர்யகுமார்..., நியூசிலாந்துக்கு எதிராக ஜொலிப்பாரா??
T20 யில் ரன் வேட்டையை தொடரும் சூர்யகுமார்..., நியூசிலாந்துக்கு எதிராக ஜொலிப்பாரா??

சர்வதேச அளவில் T20ல் கடைசியாக விளையாடப்பட்ட 10 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

T20:

இந்திய அணியானது, இந்த வருட தொடக்கத்தில் இருந்தே டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதில் குறிப்பாக, இந்திய அணி இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்று அசத்தி உள்ளது. இந்நிலையில், இதுவரை சர்வதேச அளவில் கடைசியாக விளையாடிய 10 டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

பிசிசிஐயின் திட்டத்தை உடைத்த ஏபி டி வில்லியர்ஸ்…, “ஐபிஎல்லை விட சிறந்த லீக் எதுவும் இல்லை”…, ஓபன் டாக்!!

இந்த பட்டியலில், இந்தியாவின் அதிரடி 360 டிகிரி நாயகன் சூர்யகுமார் யாதவ் 2 சதம், 4 அரைசதம் உட்பட 518 ரன்களை குவித்து முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்ததாகவும் இந்தியாவின் விராட் கோலி 422 ரன்களுடன் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவரை தொடர்ந்து, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (389), நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ் (379), தென் ஆப்பிரிக்காவின் ரிலீ ரோசோவ் (372) மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (368) ரன்களுடன் டாப் 6 இடத்தில் உள்ளனர். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் இன்று முதல் விளையாட இருக்கிறது. இதிலும், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here