சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை – இணையத்தில் வைரலாகும் செய்தி!!

0
போதும்டா சாமி ஆள விடுங்க., ஹீரோ ஆசையை விட்டு  மீண்டும் காமெடிக்கே திரும்பிய நடிகர் சந்தானம்!!

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகம் எடுக்க உள்ளனர். அதற்கான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தில்லுக்கு துட்டு திரைப்படம்:

விஜய் டிவியில் வெளியான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியை இயக்கி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் இயக்குனர் ராம்பாலா. மேலும் இந்த நிகழ்ச்சியில் நடித்த நடிகர் சந்தனத்தை ஹீரோவாக வைத்து தமிழ் சினிமாவில் தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கினார்.

இந்த படம் நன்றாக ஹிட் அடித்தது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் மிர்ச்சி சிவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் இந்த படத்துக்கு இடியட் என்ற பெயர் வைத்தனர். இந்த படமும் பேய் படம் என்றே கூறியுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் இயக்குனர் ராம்பாலா தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளார். மீண்டும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகாவை நடிக்க வைக்க அவரிடம் சென்று கேட்டு உள்ளனர். ஆனால் நடிகை ஹன்சிகா நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here