ஷூட்டிங்கே முடியல .., அதுக்குள்ள இத்தனை கண்டிஷன் போட்ட ரஜினி.., நெல்சனுக்கு விழுந்த பேரிடி!!

0

இந்திய சினிமாவில் ஸ்டைலிஷ் நடிகராக திகழ்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதா பேசப்படவில்லை. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அண்மையில் வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலையில் ஆரம்பித்த இப்படத்தின் ஷூட்டிங் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் சில விதிமுறைகள் இருக்கிறது என்று நெல்சனிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சில வருடங்களாக சூப்பர்ஸ்டாரின் உடல்நிலை தொய்வு காரணமாக ரஜினி ஆறு மாதங்களுக்கு மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் இருந்து நடிகர் ரஜினி படத்தில் நடிப்பதற்கு கண்டிஷன் போடுவதாக கூறப்படுகிறது. அதே போல் இந்த படத்திலும் கண்டிஷன் போட்டுள்ளார்.

அதாவது நடிகர் ரஜினிகாந்த் காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்து விட்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் பேக்கப் செய்து விடுவாராம். அதுமட்டுமின்றி இரவு நேர ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டாராம். மேலும் எந்த காட்சியிலும் ரிஸ்க் எடுக்காமல் ரிலாக்ஸாக நடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக படப்பிடிப்பின் போது அவரே தெரிவித்தார். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் எல்லா விதிமுறைகளையும் ஏற்று படத்தை முடிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here