தமிழகத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0

தமிழகத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசை தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். மேலும் மற்ற மாவட்டங்களில் இருந்தும் இந்த திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எந்த ஒரு திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனாவின் ஆட்டம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இந்த வருடம் குலசை தசரா திருவிழா பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதன் அடிப்படையில் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, இந்த வருடம் வரும் செப்டம்பர் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 5ம் தேதி நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடக்கிறது. மேலும் விழாவில் வேடமிடும் பக்தர்கள் கடந்த மாதம் முதலே காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தசரா பண்டிகையையொட்டி வரும் அக்டோபர் 1, 2022 முதல் அக்டோபர் 4, 2022 வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப் பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப் பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கும் , மேலும் பண்டிகை முடிந்து பக்தர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக அக்டோபர் 6 முதல் அக்டோபர் 10 வரை கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here