
நடிகர் ரஜினிகாந்த் நடித்த எஜமான் படத்தை பார்த்துவிட்டு ரசிகை ஒருவர் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதை தொடர்ந்து, அந்த கடிதத்தை தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமா கேரியரில் எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வருகிறார். இப்பொழுது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவருடைய மகளான ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி மாஸ் நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் கேரியரில் மிக முக்கியமாக விளங்கிய திரைப்படம் தான் கடந்த 1993ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த எஜமான். அப்போதைய காலகட்டத்தில் மக்களிடம் இருந்து விமர்சனத்தை கேட்டு அறிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் எஜமான் படத்தின் தயாரிப்பாளரான AVM ஸ்டுடியோ ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு அஞ்சல் மூலமாக அனுப்புமாறு ரசிகர்களிடம் AVM சரவணன் கேட்டு கொண்டார். அவர் சொன்னது போல் பலரும் அனுப்பினர்.
ஆதார் எண்ணுடன் மின் எண்ணை இணைக்காதவர்களா?? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!!!
அதில் ஒரு கடிதத்தை 30 வருடங்களுக்கு பிறகு AVM ஸ்டுடியோ புரோடக்சன் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது அந்த கடிதத்தில், சார்.., நான் செல்வி திலகவதி, எஜமான் படத்தை பார்த்தேன். அதில் ரஜினி நடித்த வானவராயன் மாதிரி மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்க நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். நான் அடுத்து இப்படத்தை ஜோடியாக பார்க்க வேண்டும். எனவே சீக்கிரம் சொல்லுங்க என்று எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
A letter for #Yejaman
In the 80's movie reviews from the public were rare and few. So, Shri M. Saravanan decided to ask people to send their reviews about #Yejaman by post. While a lot of letters came with so much for the film, one stood out. (1/4) pic.twitter.com/Td4zNxAZ05
— AVM Productions (@avmproductions) March 16, 2023