
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால், ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என இந்திய அணிக்கு அதிக நெருக்கடி கொடுக்க கூடும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதே போல, இந்திய அணியானது முதல் போட்டியை வென்று தொடரை வெல்ல முன்னிலை பெற முற்படும். இதனால், நாளை நடைபெற இருக்கும் போட்டிக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. நாளை போட்டியில் மட்டும், ரோஹித் சர்மா விலகி உள்ளதால், ஹர்திக் பாண்டியா தலைமையில் முதன் முதலாக இந்திய அணி ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளது.
இந்த போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை பொறுத்த வரையில், ரோஹித் இல்லாததால், சுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் தொடக்கம் தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சூர்யகுமார் களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில், ஆல் ரவுண்டர்களாக, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:
சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா (C), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்