சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு புதிய வசதி., மெட்ரோ நிர்வாகம் அதிரடி தகவல்!!!

0
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு புதிய வசதி., மெட்ரோ நிர்வாகம் அதிரடி தகவல்!!!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு புதிய வசதி., மெட்ரோ நிர்வாகம் அதிரடி தகவல்!!!

சென்னையில் மெட்ரோ ரயில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து சென்ட்ரல் to பரங்கிமலை, விம்கோ நகர் to விமான நிலையம் ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 2.4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இதனால் நெரிசல்மிக்க நேரங்களில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தற்போது 4 பெட்டிகளுடன் இயங்கி வரும் மெட்ரோ ரயிலில் கூடுதலாக பெட்டிகளை சேர்க்க உள்ளதாக அண்மையில் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த 2 வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் (எஸ்கலேட்டர்) படிக்கட்டுகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கூறியுள்ளார்.

காட்டுனா ரஜினி மாதிரி ஆம்பளையா தான் காட்டுவேன்.., அடம்பிடித்த இளம் பெண் .., சூப்பர் ஸ்டாருக்கே straight ஆ கடிதம் அனுப்பிய ரசிகை!!

இதனால் நெரிசல்மிகு நேரங்களில் பயனாளர்கள் சிரமமின்றி ரயில் நிலையங்களுக்கு சென்று வரலாம். இதன்படி மீனம்பாக்கம், கிண்டி, எழும்பூர் உள்ளிட்ட 22 ரயில் நிலையங்களில் 41 எஸ்கலேட்டர் அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here