”ஜவான்’ படத்தில் கேமியோ ரோலில் வர இருந்த தளபதி..,நினைத்ததை படு கச்சிதமா நடத்தி முடிச்சு காட்டிய அட்லீ!!

0
''ஜவான்' படத்தில் கேமியோ ரோலில் வர இருந்த தளபதி..,நினைத்ததை படு கச்சிதமா நடத்தி முடிச்சு காட்டிய அட்லீ!!
''ஜவான்' படத்தில் கேமியோ ரோலில் வர இருந்த தளபதி..,நினைத்ததை படு கச்சிதமா நடத்தி முடிச்சு காட்டிய அட்லீ!!

ராஜா ராணி, தெறி, மெர்சல் என பல ஹிட் படங்களை தமிழ் திரைக்கு கொடுத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பிரமாண்டமான திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் ஷாருக்கான் 20 நிமிடம் தொடர்ந்து சண்டையிடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார். இப்படி ஏகப்பட்ட பிரபலங்கள் ஒன்றாக சங்கமித்து நடித்து வரும் இப்படம் குறித்து பல அப்டேட்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது. அதாவது இப்படத்தில் கேமியோ ரோலில் விஜய் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு செய்தி பரவி வந்தது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு புதிய வசதி., மெட்ரோ நிர்வாகம் அதிரடி தகவல்!!!

இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில், தற்போது இது குறித்து தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகளில் 15 – 20 நிமிடங்கள் ஷாருக்கானுடன் இருக்குமாம். மேலும் சென்னையில் வைத்து இப்படத்தில் ஷாருக்கானின் ஷூட்டிங் நடந்த போதே இவருடன் விஜய் நடித்து முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதை கேட்ட தளபதி ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here