சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் 54 வயது நடிகை.. நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் அதிரடி காம்போ!!

0
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் 54 வயது நடிகை.. நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் அதிரடி காம்போ!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன், அன்று முதல் இன்று வரை ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது, இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் Pre ப்ரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் நடிகை ஷோபனா  ரஜினியின் ஜோடியாக நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே இருவரும் தளபதி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளனர். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here