அனுஷ்கா இல்ல., இப்போ இவங்க தானாம் – இளம் நடிகையுடன் டேட்டிங்கில் இணைந்த பாகுபலி பிரபாஸ்?

0
அனுஷ்கா இல்ல., இப்போ இவங்க தானாம் - இளம் நடிகையுடன் டேட்டிங்கில் இணைந்த பாகுபலி பிரபாஸ்?

பாகுபலி படத்தின் மூலம், இந்திய திரையுலகில் பெரிதாக பேசப்பட்ட நடிகர் பிரபாஸ், தற்போது இளம் நடிகை க்ரித்தி சனோன் உடன் டேட்டிங்கில் இருந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரபாஸ் டேட்டிங்:

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், உருவான பாகுபலி படத்தின் மூலம் இந்திய திரை உலகில் பெரிதாக மதிக்கப்பட்டவர் நடிகர் பிரபாஸ். தொடர்ந்து தற்போது, ராமாயணத்தை தழுவி உருவாகி வரும் ஆதி புரூஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் இயக்குனர் ஓம்ராவத் இயக்கம் இந்த படத்தில் சைப் அலிகான், க்ரித்தி சனோன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து அனுஷ்காவும் இவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால், இருவரும் இதனை மறுத்தனர். தற்போது, பிரபாஸ் நடிகை க்ரித்தி சனோன் உடன் டேட்டிங்கில் இருந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை க்ரித்தி கலந்து கொண்ட போது இடையில் அவருக்கு பிரபாஸ் போன் செய்து பேசியது, இந்த வதந்தியை ஓரளவு உறுதிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால், இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here