கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய தலைவர் – பாய்சிங் பூட்டியா வாய்ப்பை தட்டி பறித்த கோல் கீப்பர்!

0
கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய தலைவர் - பாய்சிங் பூட்டியா வாய்ப்பை தட்டி பறித்த கோல் கீப்பர்!
கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய தலைவர் - பாய்சிங் பூட்டியா வாய்ப்பை தட்டி பறித்த கோல் கீப்பர்!

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்.

இந்திய கால்பந்து கூட்டமைப்பு!

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) தற்காலிகமாக ரத்து செய்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா FIFA ) தெரிவித்தது. இதற்கு காரணம் இந்திய கால்பந்து அமைப்பில் 3வது தரப்பினர் தலையிட்டதால் இந்தியாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இதனால் பல பிரச்சனைகளை கடந்து இந்திய கால்பந்து அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டது. இந்த தடை நீக்கப்பட்டதால் மகளிர் கால்பந்து உலக கோப்பை திட்டமிட்டபடி இந்தியாவிலேயே நடத்தப்படும் என பிஃபா தெரிவித்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதன்படி தற்போது இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கான தலைவர்களை நியமித்துள்ளனர். அந்த வகையில் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக கல்யாண் செளபே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக கிழக்கு வங்கம் மற்றும் மெளன் பாகன் அணியின் கோல் கீப்பராக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கர்நாடக கால்பந்து கழகத்தின் தலைவரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஏ.ஹரிஸ் அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் கிபா அஜய் பொருளாளர் பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த குழுவிற்கு முன்மொழியப்பட்ட 14 உறுப்பினர்களும் கால்பந்து அமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here