லேடி சூப்பர் ஸ்டார் அடுத்த படத்தின் First Look வெளியீடு – சந்தேகத்தை கிளப்பிய படப்பெயர்!!

0

நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அடுத்த படமான கனெக்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வேற லெவல் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.  அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.  இந்த நிலையில், இவரது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து இவர் பிறந்த நாள் கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைத்தளங்கள் முழுவதும் பயங்கர வைரலில் உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கி வரும் கனெக்ட் என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இவர் போக, இந்த படத்தில் சத்யராஜ், அனுபம்கெர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.  இதனை அடுத்து, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இது தான் உண்மையான பர்த் டே கிப்ட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதே படப்பெயரில் 2019 ஆம் ஆண்டு ஆங்கில படம் ஒன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் இது அப்படத்தின் சாயலை தழுவி எடுக்கப்பட்டதோ என சந்தேகித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here