
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்பு, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை:
தமிழ் சினிமாவில் பேமஸ் நடிகையும், தீவிர அரசியல் செயல்பாட்டாளருமாக திகழ்பவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், சரத், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை வட்டாரத்தில் பிஸியான நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பார்ப்பதற்கு இட்லி போல மிகவும் அழகாக குண்டாக தோற்றமளித்து வந்த இவர் , சமீப தினங்களாக தன் உடல் நிலையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். பாஜக கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த இவர், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகம் எல்லாம் ஒட்டி போய், அடையாளமே தெரியாத அளவுக்கு நடிகை குஷ்பு மாறி உள்ளார். இது குறித்து பதிவிட்ட அவர், முதுகெலும்பு பிரச்சனையால் தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும், 2 நாட்களுக்குப் பின் வீடு திரும்ப உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.
Had a procedure for my coccyx bone yesterday. Back home now. Rest for 2 days n then back to work.
Sorry for the wishes, once again wishing you all #happydussehra2022 #HappyVijayadashami2022. pic.twitter.com/S8n1SjHEnS— KhushbuSundar (@khushsundar) October 5, 2022