தவறுதலா வேறொரு அக்கவுண்டிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? உங்களுக்குத்தான் இந்த பதிவு!!

0
தவறுதலா வேறொரு அக்கவுண்டிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? உங்களுக்குத்தான் இந்த பதிவு!!
தவறுதலா வேறொரு அக்கவுண்டிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? உங்களுக்குத்தான் இந்த பதிவு!!

நபர் ஒருவர் தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பிவிட்டால், அடுத்து என்ன செய்ய வேண்டும், யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

புகாருக்கு தீர்வு:

முந்தைய காலத்தில் வங்கிகளில் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் வரிசையில் நின்று தான் உரிய செயல்பாடுகளை செய்ய முடியும். ஆனால் இப்போது டெக்னாலஜி அதிக அளவில் வளர்ச்சி பெற்று உள்ளது. இந்த நவீன உலகத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலம் தான் நடக்கிறது. அந்த வகையில் பணப்பரிவர்த்தனை செய்ய UPI, NET BANKING போன்ற வசதிகளும் வந்துவிட்டது. இந்நிலையில் ஒரு நபர், பணம் அனுப்ப வேண்டிய நபருக்கு பதிலாக மாற்றி வேறு ஒருவருக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி வங்கி வாடிக்கையாளர், மாறுதலாக பரிவர்த்தனை செய்தது குறித்து புகார் அளித்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த பணம் திருப்பி செலுத்தப்படும். இருப்பினும் இந்த பணம் return ஆவதற்கு வங்கி ஹெல்ப் பண்ண வில்லை என்றால், தவறுதலாக பணத்தை பரிவர்த்தனை செய்த நபர் நேரடியாக bankingombudsman.rbi.org.in என்ற mail ளுக்கு தங்கள் புகாரை அனுப்பலாம்.

இதுமட்டுமல்லாமல், தவறான நபருக்கு நீங்கள் அனுப்பிய பணத்தை அவரிடம் கேட்கும் போது, அவர் return பண்ணுவதற்கு மறுப்பு தெரிவித்தால், அவர் மீது சட்ட நடவடிக்கை வழக்குப்பதிவு செய்யலாம்.மேலும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, பயனாளரின் வங்கி கணக்கு குறித்து சரியான விவரங்களை கொடுப்பதில் லிங்கர் தவறு செய்தால், அதற்கு வங்கி எந்தவொரு பொறுப்பையும் எடுத்து கொள்ளாது என . தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here