
நடிகர் கவின் நடித்த டாடா திரைப்படத்தை பார்த்து நடிகர் கார்த்தி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நிலையில் அந்த மகிழ்ச்சியை கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டாடா திரைப்படம்:
தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் திறமையான நடிகர்கள் சின்னத்திரையின் மூலமாகவே வெளி உலகத்திற்கு தெரிகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் உள்ளிட்ட நடிகர்களின் வரிசையில் தற்போது சரவணன் மீனாட்சி கவினும் இணைந்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் இந்த வருடத்தின் வெற்றி படம் என்று அங்கீகாரத்தை பெற்று வருகிறது. சொல்ல போனால் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் தனுஷ் கவினுக்கு Call பண்ணி படத்தை குறித்து பாராட்டி பேசியுள்ளார். தற்போது தனுஷை தொடர்ந்து வந்தியத்தேவன் கார்த்திக் கவினை தொலைபேசியில் அழைத்து கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் படத்தை பற்றி பேசி பாராட்டியுள்ளார்.
கடைசில பாக்கியாவுக்கு ஜோடி வந்தாச்சு.., பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத ட்விஸ்ட்!!
இதுகுறித்து நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த பதிவில், இது 5 நிமிடம் உரையாடல், நீங்கள் என்னிடம் சொன்ன எல்லா விஷயத்தையும் ஒருபோதும் மறக்கமாட்டேன். அதை விட இந்த படம் எப்போதும் நினைவிருக்கும். வாழ்க வளமுடன் வந்திய தேவன் என்று குறிப்பிட்டுள்ளார். படத்தை பார்த்து விட்டு படக்குழுவினர் நடிகர் கார்த்தி ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
It was a five minute call. Amongst the everything you told me, I can only remember this one thing forever – “I will remember this film”
And I want to let you know that I will never forget this, @Karthi_Offl sir ♥️🙏🏼#VaazhgaValamudanVandhiyatheva 🔥 https://t.co/ifyhLUtswS pic.twitter.com/arLCZjs9Br— Kavin (@Kavin_m_0431) March 1, 2023