ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 6வது சுற்று நிலவரம் – காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!

0
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 6வது சுற்று நிலவரம் - காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 6வது சுற்று நிலவரம் - காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!

தமிழகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தல் கடந்த பிப். 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதில் 6வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.எஸ். இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. அதில் பல்வேறு கட்சியை சேர்ந்த 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மக்கள் வாக்களிக்க 238 பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாக்குப்பதிவு நல்லபடியாக முடிவடைந்தது. மேலும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச் 2) நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய முறை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அந்த வகையில் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை தரைத்தளத்தில் 10 மேசைகளும், முதல் தளத்தில் 6 மேசைகளும் என 2 அறைகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 29,402 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் 46,179 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,777 வாக்குகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here