துபாய் ஓபன் டென்னிஸ்: நெதர்லாந்து வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நோவக் ஜோகோவிச்!!

0
துபாய் ஓபன் டென்னிஸ்: நெதர்லாந்து வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நோவக் ஜோகோவிச்!!
துபாய் ஓபன் டென்னிஸ்: நெதர்லாந்து வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நோவக் ஜோகோவிச்!!

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், நெதர்லாந்து வீரரை வீழ்த்தி, உலகின் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

நோவக் ஜோகோவிச்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடப்பு ஆண்டுக்கான துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் ஆடவருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில், உலகின் நம்பர் 1. வீரரான நோவக் ஜோகோவிச் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், தகுதி சுற்று போட்டியில் நேற்று, நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், ஆரம்பம் முதலே தனது முழு ஆதிக்கத்தையும் ஜோகோவிச் செலுத்தினார். இதில், ஜோகோவிச் 6-2 மற்றும் 6-3 என தொடர்ந்து இரு செட்களை கைப்பற்றி நெதர்லாந்து வீரரை வீழ்த்தினார். இதன் மூலம், காலிறுதி சுற்றுக்கு நோவக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

இன்று நடைபெற உள்ள, இந்த காலிறுதி சுற்றில் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸை எதிர் கொள்ள உள்ளார். தகுதி சுற்றில் வெற்றி பெற்றது குறித்து, நோவக் ஜோகோவிச் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டியிருந்தது. நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here