ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை அள்ளிய  ஜெயம் ரவியின் “சைரன் ”.., வெளியான மாஸ் அப்டேட்!!

0
ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை அள்ளிய  ஜெயம் ரவியின் “சைரன் ”.., வெளியான மாஸ் அப்டேட்!!
தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது சைரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்க, கௌஷிக் மஹாதா, யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் படம் தியேட்டர் வருவதற்கு முன்னரே வசூலை குவிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது இப்படத்தின் சாட் லைட் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ரூ.40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதை விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளனர். பல கோடிக்கு விலை போன இப்படம் வருகிற பிப்ரவரி  மாதம் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here