தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5%-ஆக உயர்வு…, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை!!

0
தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5%-ஆக உயர்வு..., பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை!!

இந்தியாவில் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 31) ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றி தொடங்கி வைத்துள்ளார். முதன் முறையாக மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றி உள்ள ஜனாதிபதியான திரௌபதி முர்மு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எண்ணி பெருமிதம் கொண்டுள்ளார். சந்திரயானை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டதை குறிப்பிட்டு, நிலவின் தென் துருவத்தில் கொடி ஏற்றிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவை சாரும் என கூறி தனது உரையை திரௌபதி முர்மு தொடங்கினார்.

தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5%-ஆக உயர்வு..., பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை!!

அவரது உரையின் சில துளிகள்:

  • ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
  • கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளானாலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 2 ஆண்டுகளாக 7.5%-க்கு மேல் உள்ளது.
  • இந்தியாவில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி மக்களை மீட்கப்பட்டுள்ளனர்.
  • சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் தற்போது வரை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
  • உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இல்லாத அளவுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை ரூ. 1200 அளவுக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று கோடி பேரில் இருந்து எட்டு கோடி பேராக உயர்ந்துள்ளது.
  • இளைஞர், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் வளர்ந்த இந்தியாவின் 4 தூண்களாக உள்ளனர்.
  • இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
  • மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, மின்னணு ஆட்டோமொபைல் துறையில் முதலீடு என தொடர்ந்து இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.
  • இவற்றின் மூலம், மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட 5வது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here