வாரத்திற்கு இனி 4 நாட்கள் மட்டுமே வேலை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட உலக நாடுகள்!!

0
பல உலக நாடுகள், தங்களது நாட்டின் வளர்ச்சி என்பது மக்கள் மற்றும் பொருளாதாரத்தை சார்ந்ததாகவே கருதுகின்றனர். இதனால், ஒவ்வொரு நாட்டில் உள்ள பிரபல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் உடல் மற்றும் மன உளைச்சல் தொடர்பான பிரச்சனைகளில் சிக்காமல் இருப்பதற்காக வேலை செய்யும் நேரம் மற்றும் நாட்களை குறைந்து வருகின்றனர். இதன் மூலம், நாட்டின் உற்பத்தித் திறன் அதிகரிக்க கூடும்.
இதையடுத்து, பெல்ஜியம் நாட்டில் வாரத்திற்கு 40 மணி நேரமும், நெதர்லாந்து நாட்டில் வாரத்திற்கு 29 மணி நேரம் ஊழியர்களின் வேலை நேரத்தை நிர்ணயித்துள்ளனர். இதனால், நாட்டின் உற்பத்தி திறன் வளர்ந்துள்ளதாக கருத்தும் தெரிவித்து வருகின்றனர். தற்போது இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி நாட்டிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக 45 நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், 6 மாதம் இந்த சோதனை முயற்சி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here