அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்வு? பழைய ஓய்வூதிய திட்டம்? ஸ்டிரைக் அறிவித்த மத்திய தொழிற்சங்கம்!!!

0
அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்வு? பழைய ஓய்வூதிய திட்டம்? ஸ்டிரைக் அறிவித்த மத்திய தொழிற்சங்கம்!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டம், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் கூறுகையில், “மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் பிப்.16ல் நடைபெற உள்ளது. இதில் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் முழுமையாக பங்கேற்க உள்ளதால், அன்றைய தினம் மறியல் போராட்டங்களும் நடைபெறும்.” என தெரிவித்துள்ளார். இருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும் என அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

சிம்புவுடன் திருமணம்?? இது தான் இப்போதைக்கு என் பிளான்.,  வரலக்ஷ்மி பகீர் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here