திரைத்துறைக்கு முன்னுதாரணமாக மாறிய பிக்பாஸ் பிரபலம் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

0

முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜனனி ஐயர் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி அடையாளத்தை நீக்கி, இனி என்னை ஜனனி என்றே அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நடிகை அதிரடி :

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில்  முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஜனனி ஐயர். 2011ம் ஆண்டு பாலா இயக்கிய, அவன் இவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தெகிடி என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு, 4ம் இடத்தை பெற்று பலரின் ஃபேவரைட் ஆனார். தற்போது நடிகர் அசோக்செல்வன் உடன் இணைந்து, வேழம் என்ற  படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரஸ்மீட்டில் பேசிய இவர், படத்தின் தலைப்பு அருமை என்றும், நல்ல வித்தியாசமான தலைப்புகள் கிடைப்பது அரிது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தன் பெயருக்கு பின்னால் இருக்கும்  ஐயர் என்பதை நீக்கி  இனி அனைவரும் ஜனனி என்று மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். திரைத்துறையில் பலரும் தங்கள் பெயருக்கு பின்னால், தங்கள் சமூகத்தின் பெயரை வைத்துக் கொள்ளும் நிலையில், ஜனனி எடுத்த இந்த அதிரடி முடிவு பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here