தனுஷ் பட சான்சை தட்டி பறித்த நடிகர் சிவகார்த்திகேயன் – என்னய்யா..இது கர்ணனுக்கு வந்த சோதனை!!

0

இயக்குனர் ராம்குமார் படத்திற்கு முதலில் ஓகே சொல்லிய நடிகர் தனுஷ் தற்போது இந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டதால்,தற்போது அதில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாய்ப்பை பறித்த நடிகர்:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் இயக்குனர் ராம்குமார். முண்டாசுப்பட்டி,ராட்சசன் உள்ளிட்ட படங்களை இயக்கி புகழின் உச்சியில் உள்ளார். தற்போது தனது புதிய படத்தின் கதையுடன், நடிகர் தனுஷை  அணுகிய இவர்,இந்த படத்தில் நடிக்க சம்மதம் வாங்கினார். ஆனால் நடிகர் தனுஷ் தற்போது, மாறன்,திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் அந்தரங்கி ரே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதையடுத்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனால், இயக்குனர் ராம்குமார் படத்தை கேன்சல் செய்துவிட்டார். தற்போது இந்த கதையை நடிகர் சிவகார்த்திகேயனிடம் சொல்லி ராம்குமார் ஓகே பண்ணி விட்டாராம். நடிகர் சிவகார்த்திகேயன் தனது டான் மற்றும் சிங்க பாதை உள்ளிட்ட படங்களை அடுத்து அவரது படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here