அடிப்பொலி.., அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் டீசர் தேதி வெளியீடு.., இணையத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
அடிப்பொலி.., அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் டீசர் தேதி வெளியீடு.., இணையத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு!!
அடிப்பொலி.., அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் டீசர் தேதி வெளியீடு.., இணையத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தின் பார்ட் 2வின் டீசர் குறித்து படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளிட்டுள்ளனர்.

புஷ்பா 2:

இயக்குனர் சுகுமார் படைப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் ‘புஷ்பா’. இப்படத்தின் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அதுபோக இப்படத்தில் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி நடிகை சமந்தா “ஊ சொல்றியா மாமா” என்ற பாடலுக்கு நடனமாடி பட்டையை கிளப்பி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தெலுங்கு மொழியில் உருவான இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும், அதற்காக அவருக்கு 10 நாட்கள் கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் குறித்து படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நல்லா தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கீங்களே ஹன்சிகா.., அழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்!!

அதாவது, அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தின் 3 நிமிட ஆக்‌ஷன் கட் டீஸர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான ஏப்ரல் 8 -ஆம் தேதி தேதி வெளியாகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, படத்தின் டீசர் கட் பணிகள் முடிந்து விட்டதாகவும், பின்னணி இசை பணிகள் மட்டும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here