58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இலங்கை…, தொடரை வென்ற நியூசிலாந்து!!

0
58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இலங்கை..., தொடரை வென்ற நியூசிலாந்து!!
58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இலங்கை..., தொடரை வென்ற நியூசிலாந்து!!

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், தொடரையும் கைப்பற்றியுள்ளது.

NZ vs SL:

இலங்கை அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில், நியூசிலாந்து அணிக்கு எதிராக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட்டின் முதல் போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்காக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால், இலங்கை அணியின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு தகர்ந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்த தொடரை சமன் செய்யும் முனைப்பில் இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 2வது போட்டியை கடந்த 17ம் தேதி முதல் விளையாடியது. இந்த போட்டியின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கே 580 ரன்களை குவித்திருந்தது. இதில், அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 215, ஹென்றி நிக்கோல்ஸ் 200* ரன்களை எடுத்திருந்தனர்.

IND vs AUS: “8 மாதங்களுக்கு மேல் ஆயிடுச்சு”.., தோல்விக்கு பிறகு பும்ராவை நினைவு கூர்ந்த ரோஹித் சர்மா!!

இதனை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 164 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், 416 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி, தனது 2வது இன்னிங்ஸை விளையாடாமல், இலங்கை அணியையே விளையாடும் படி கூறியிருந்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 358 ரன்கள் மட்டுமே எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here