அட்ரா சக்க…, பிளாக் பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஜித்..,AK 62 படத்தின் மாஸ் அப்டேட்!!

0
அட்ரா சக்க..., பிளாக் பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஜித்..,AK 62 படத்தின் மாஸ் அப்டேட்!!
அட்ரா சக்க..., பிளாக் பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஜித்..,AK 62 படத்தின் மாஸ் அப்டேட்!!

நடிகர் அஜித்தை வைத்து செம ஹிட் படத்தை கொடுத்த முக்கிய இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை மன்னனாக கோலிவுட்டை ஆண்டு வருபவர் தான் நடிகர் அஜித்குமார். கடந்த மாதம் இவர் நடித்த துணிவு திரைப்படம் வெற்றி வாகை சூடி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் மாஸ் கெட்டப்பில் நடித்தது மட்டுமின்றி, வங்கியால் மக்கள் ஏமாற கூடாது என்று ஒரு சோசியல் மெசேஜுடன் படத்தை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். இதுவரை அஜித் திரைப்படங்கள் செய்யாத சாதனைகளை துணிவு திரைப்படம் செய்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி துணிவு திரைப்படம் இதுவரை 250 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்னர் ஏகே 62 படத்தை விக்கி இயக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், மகிழ் திருமேனியிடம் படம் சென்று விட்டதாக கூறப்பட்டது.

இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்.., பாரதி கண்ணம்மா 2 சீரியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம்!!!!

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரபல இயக்குநருடன் அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here