#Justiceforvigneshsivan.., அஜித் செய்த காரியத்தால் விக்னேஷ் சிவனுக்கு அதிகரிக்கும் ஆதரவு.., ட்ரெண்டிங் மீம்ஸ்!!

0
#Justiceforvigneshsivan.., அஜித் செய்த காரியத்தால் விக்னேஷ் சிவனுக்கு அதிகரிக்கும் ஆதரவு.., ட்ரெண்டிங் மீம்ஸ்!!
#Justiceforvigneshsivan.., அஜித் செய்த காரியத்தால் விக்னேஷ் சிவனுக்கு அதிகரிக்கும் ஆதரவு.., ட்ரெண்டிங் மீம்ஸ்!!

அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், வேறு ஒரு இயக்குனர் எடுக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ஏகே 62:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் அதிகமாக கல்லா கட்டி வருகிறது. அந்த வகையில் துணிவு திரைப்படம் உலக அளவில் 220 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். அதுபோக நயன்தாரா, சந்தானம், அரவிந்த்சாமி போன்ற பிரபலங்கள் நடிக்க இருக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஏகே 62 படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் குமாரின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் எடுக்க இருந்த நிலையில், அவர் படத்தில் இருந்து அதிரடியாக விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அஜித்தின் 62 வது படத்தின் கதை, லைக்கா தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லபடுகிறது. இப்படம் வேறு இயக்குனர் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் அட்லீ, விஷ்ணுவர்தன், மகிழ் திருமேனி ஆகியோர் கையில் போக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்., 5 பேர் கொண்ட குழு நியமனம்! அரசு அதிரடி அறிவிப்பு!!

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், வேறு ஒரு இயக்குனர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரசிகர்கள் விக்கிக்கு நியாயம் கேட்டு ட்விட்டர் பக்கத்தில் #Justiceforvigneshshivan என்ற hashtag ஒன்றை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏகே 62 படம் கண்டிப்பாக மகிழ் திருமேனி-க்கு தான் கிடைக்க போகிறது என்றும் பல மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்போது ஏகே62வை யார் தான் இயக்கப் போகிறார்கள் என்று அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here