அப்படி போடு.., துணிவை தொடர்ந்து அஜித் நடிக்கும் “ஏகே 62” …, இந்த தேதியில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!!

0
அப்படி போடு.., துணிவை தொடர்ந்து அஜித் நடிக்கும்
அப்படி போடு.., துணிவை தொடர்ந்து அஜித் நடிக்கும் "ஏகே 62" ..., இந்த தேதியில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!!

நடிகர் அஜித்குமார் அடுத்து நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தின் அப்டேட் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர் மன்றமே இல்லாமல் தனக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இயக்குனர் வினோத் படைப்பில் உருவான துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் துணிவு திரைப்படம் வசூலில் நல்லா கல்லா கட்டி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து இப்படம் நெட் பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 8ம் தேதி வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தொடர்ந்து ஏகே 62வில் அஜித் நடிக்க இருக்கிறார். இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், அவர் விலகியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த Official அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்காடா எண்டு போடுறீங்க.., சீரியலை முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா குழு எடுத்த அதிரடி முடிவு!!

மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் மகிழ் திருமேனியிடம் கொடுத்தாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில் ஏகே 62 படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தின் அப்டேட் வருகிற பிப்ரவரி 6 அல்லது 7 வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த அப்டேட் யார் இயக்குனர் என்பது குறித்து இருக்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here