தியேட்டர்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!!

0
rb udayakumar on theatre release

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்  கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வகையில் செயல்படும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவித்துள்ளார்.

திரையரங்குகள் மீண்டும் திறப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் ஊரடங்கை தொடர்ந்து நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டது. இதனால் தியேட்டர்களை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தியேட்டர் உரிமையாளர்களும் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை ஒட்டி அக்டோபர் 15  முதல் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதித்தது மத்திய அரசு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழக அரசு நவம்பர் 10 ம் தேதி முதல் திரையரங்குகளை 50% பார்வையாளர்களுடன் திறக்கலாம் என அனுமதி அளித்தது. ஆனால் புதிய படங்கள் எதுவும் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. பொங்கல் தினத்தன்று வழக்கமாக புதிய படங்கள் வெளிவரும் பட்சத்தில், தற்போது திரைத்துறையினர் தமிழக முதல்வரிடம் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க சொல்லி கோரிக்கை வைத்திருந்தனர். இது தொடர்பாக நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரை சந்தித்து பேசினார். நடிகர் சிம்புவும் 100% இருக்கைக்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது அரசு.

தடாலடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – மாலை விலை நிலவரம்!!

Theatres

இதற்கு திரை துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தாலும் மருத்துவ நிபுணர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார் ”தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்தது முதல்வருக்கு பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத்தந்துள்ளது. பள்ளிகளை திறந்தால் அதற்கு முழு மாணவர்களும் வருகை தர வேண்டும். ஆனால் திரையரங்குகளில் குறிப்பிட்ட பார்வையாளர்கள் இருந்தாலே போதுமானது. திரையரங்குகள் அரசு விதித்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றவேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத அனைத்து திரையரங்குகள் மீதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதி முடிவை மறுபரிசீலனை செய்ய மருத்துவ குழு வலியுறுத்திவருவது முதல்வர் பார்வைக்கு எடுத்துச்செல்லபடும் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here