பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..!

0
Minister Sengottaiyan
Minister Sengottaiyan

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு காரணாமாக கடந்த 60 நாட்களுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை அது சாத்தியமற்றதாகவே தெரிகிறது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் ஆகஸ்ட் மாதம் திறப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொதுமுடக்க காலத்தின் பொழுது மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிகளை திறப்பது, பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சில தனியார் பள்ளிகள், ஊரடங்கு முடிந்து வகுப்புகள் தொடங்க தாமதமாகும் என்கிற காரணத்தால் ஜூன் முதலே ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here