3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…அரசு அனுமதி…!

0

கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசிகள் மட்டுமே  அதன் பிடியிலிருந்து  இருந்து மக்களை காக்கும் பேராயுதமாக விளங்குகிறது. இந்நிலையில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை போட சீன அரசு அனுமதி அளித்து உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் தன் வீரியத்தை குறைக்காமல் பல உயிர்களை பழிவாங்கி கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போர்க்கால அடிப்படையில்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கிய பங்கு வகிப்பது தடுப்புசிகளே. இந்நிலையில் சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சீன அரசு அனுமதி அளித்துள்ளது.

சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு அவசரமாக பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. ஆனால் இதுபற்றி சினோவாக் நிறுவனத் தலைவர் யின் வெய்டாங் கூறுகையில், இந்தத் தடுப்பூசியை எந்த வயதினரிடம் இருந்து தொடங்குவது என்று முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின்  தயாரிப்பான  சினோவாக் மற்றும் சினோபார்ம் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here