தொற்று பரவல் குறைந்ததன் எதிரொலி: ரயில்களில் முன்பதிவு அதிகரிப்பு!!!

0
ரயிலை கையால் தள்ளி விபத்தை தடுத்த பயணிகள் - வீடியோவை பார்த்து பிரமித்து போன நெட்டிசன்கள்!!
ரயிலை கையால் தள்ளி விபத்தை தடுத்த பயணிகள் - வீடியோவை பார்த்து பிரமித்து போன நெட்டிசன்கள்!!

கொரோனா இரண்டாவது  அலை பரவல் காரணமாக தமிழ் நாட்டில் பேருந்து  போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விளைவாக ரயில்களில் முன்பதிவு அதிகரித்து உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

பயணிகள் வரத்து குறைந்ததால் பெரும்பாலான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயங்கி வந்தன. அவசர பணிகளுக்காக மட்டும் மக்கள் இந்த ரயில்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அல்லது பணிநிமித்தமாக செல்ல ரயில்களையே அதிகம் நாடுக்கின்றனர்.

இதனடிப்படையில்  சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கும் ரயில் பயண முன்பதிவுகள் நேற்று அதிக அளவில் நடந்தன. நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட ரயில் நிலையங்களில் நேற்று வரிசையில் நின்று பயணிகள் முன்பதிவுகளை மேற்கொண்டனர். எனவே இவ்வாரம் முதல் ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பாக்கப்டுகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here