பிசிசிஐயின் திட்டத்தை உடைத்த ஏபி டி வில்லியர்ஸ்…, “ஐபிஎல்லை விட சிறந்த லீக் எதுவும் இல்லை”…, ஓபன் டாக்!!

0
பிசிசிஐயின் திட்டத்தை உடைத்த ஏபி டி வில்லியர்ஸ்...,
பிசிசிஐயின் திட்டத்தை உடைத்த ஏபி டி வில்லியர்ஸ்..., "ஐபிஎல்லை விட சிறந்த லீக் எதுவும் இல்லை"..., ஓபன் டாக்!!

தென் ஆப்பிரிக்காவில் SA T20 லீக் நடைபெற்று வரும் நிலையில், ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் மற்றும் பிசிசிஐ குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ்:

இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை இன்று ராஞ்சி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்காக, இரு அணிகளும் தயாராகி வரும் இந்நிலையில், ஐபிஎல் லீக்குகள் போல, வெளிநாடுகளில் வெவ்வேறு பெயர்களில் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதில், குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் SAT20 லீக் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வெளிநாட்டு லீக் தொடர்களில், இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ விளையாட அனுமதி அளிக்காததால், இந்த SA T20 லீக்கில் இந்திய வீரர்கள் பங்கு பெறவில்லை. இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவின் 360 டிகிரி நாயகன் ஏபி டி வில்லியர்ஸ் பிசிசிஐயின் திட்டம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் சானியா மிர்சா & போபண்ணா ஜோடி ஏமாற்றம்!!

அவர் கூறியதாவது, பிசிசிஐயானது உலக கோப்பை வர இருப்பதால் தெளிவான திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனால், தான் இந்திய வீரர்களுக்கு வெளிநாட்டு லீக்குகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஐபிஎல் தொடரை விட சிறந்த லீக் எதுவும் இல்லை என அதிரடி நாயகன் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here