சூடுபிடிக்கும் தேர்தல் களம்., அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவம்., உயிரிழப்புகளால் பாகிஸ்தானில் பதற்றம்!!!

0
பொதுவாக அரசு பொது நிகழ்வுகள் அல்லது பொது விழாக்கள் நடைபெறும் நேரத்தில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு வாய்ப்புள்ளது.  அந்த வகையில் பாகிஸ்தானில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த சூழ்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று  பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த அசம்பாவிதத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.  மேலும் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் இப்படி அடுத்தடுத்து அசம்பாவிதமான சம்பவங்கள் நடந்து வருவதால் பாகிஸ்தானில் பதட்ட நிலை உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here