தமிழகத்தில் சுய தொழில் தொடங்க எண்ணுபவர்களுக்கு அரிய வாய்ப்பு – அக். 26 விழிப்புணர்வு முகாம்!

0
தமிழகத்தில் சுய தொழில் தொடங்க எண்ணுபவர்களுக்கு அரிய வாய்ப்பு - அக். 26 விழிப்புணர்வு முகாம்!
தமிழகத்தில் சுய தொழில் தொடங்க எண்ணுபவர்களுக்கு அரிய வாய்ப்பு - அக். 26 விழிப்புணர்வு முகாம்!

தமிழக மக்களிடையே சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அரசு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் விழிப்புணர்வு முகாமை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த முகாம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

விழிப்புணர்வு முகாம்:

தமிழகத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கில் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு என்பது பெரும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு உதவ அரசு அவ்வப்போது தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. கடந்த மே மற்றும் ஜூலை மாதத்தில் TNPSC போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து துறை வாரியாக காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு மத்தியில் சுய தொழில் செய்பவர்களையும் அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் வேலை பெறும் வாய்ப்பு உருவாகிறது. மேலும் தொழில் முனைவோர்களுக்கு அரசு சார்பாக வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமானது வரும் அக். 26ம் தேதியன்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுயதொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் சொந்தமாக தொழில் தொடங்குவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து விளக்கப்படும். அத்துடன் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்றவைகள் வழங்கப்படும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 96771 52205, 22252082, 044-22252081, 9444556099 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here