SBI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? – தீபாவளி பரிசு ரெடி!

0
SBI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? - தீபாவளி பரிசு ரெடி!
SBI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? - தீபாவளி பரிசு ரெடி!

நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,வைப்பு நிதி தொகைக்கு வட்டியினை உயர்த்தியுள்ளது.

வட்டி விகிதம் உயர்வு:

பொதுமக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை மிகவும் பாதுகாப்பான வகையில் சேமிப்பதை விரும்புகின்றனர். தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக மக்களை ஈர்த்தாலும் மக்கள் பாதுகாப்பு என்பதை மட்டுமே முதல் அம்சமாக கருதுகிறார்கள். இதனால் அதிகளவிலானவர்கள் நாட்டின் முக்கிய வங்கிகளில் வைப்பு நிதி திட்டத்தில் தங்கள் பணத்தை சேமிக்கின்றனர். இந்த திட்டங்களில் பணம் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதோடு இதற்கான வட்டியும் சரியான விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குறிப்பாக வைப்பு நிதி திட்டத்தில் முதியவர்களுக்கான வட்டி விகிதமானது பொது மக்களை விட சற்று அதிக அளவில் உள்ளது. எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 0.80% வட்டியினை அதிகரித்து வழங்கியுள்ளது. வயது மூத்தவர்களுக்கான கணக்கில் இந்த வட்டி விகிதமானது 6.9 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தின் விவரங்கள் குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வயது மூத்தவர்களுக்கான வைப்பு நிதி திட்டத்தில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு 6.90% என்ற அளவில் வட்டியும் 3 முதல் 5 ஆண்டுகளுக்கான திட்டம் மற்றும் 1 முதல் 2 ஆண்டுகளுக்கான திட்டத்தில் 6.60 சதவீதமும், மிகவும் குறைந்த நாட்களான 7 முதல் 45 நாட்களுக்கான கணக்கில் 3.5% வட்டியும் வயது மூத்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கான திட்டத்தில் 5 முதல் 10 ஆண்டு மற்றும் 3 முதல் 5 ஆண்டு திட்டங்களில் மற்றும் 1 முதல் 2 ஆண்டுகளுக்கான கணக்கில் 6.10% வட்டியும், 7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு நிதிக்கு 3% வட்டியும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here